Enable Javscript for better performance
"சீலிங் நடவடிக்கையை  ஒத்தி வைக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவாலும் மாநராட்சி அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படும் சீலிங் நடவடிக்கைகளை ஜூன் 30- ஆம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என்று வடக்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் திலக்ராஜ் கட்டாரியா கோரிக்கை விடுத்துள்ளார்.
    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:   வணிக வளாகங்களுக்கு உருமாற்றக் கட்டணத்தை செலுத்துவதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,  உருமாற்றக் கட்டணம் செலுத்தத் தவறிய வணிக வளாகங்கள் மீது சீல் வைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். மேலும், ஜூன் 30 -ஆம் தேதி வரை சீல் வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சிகளும், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவும் ஒத்திவைக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம், கண்காணிப்புக் குழு ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai