Enable Javscript for better performance
டிடிஇஏ பள்ளிகளில் திருவள்ளுவர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் புதன்கிழமை திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. 
    வான் புகழ் கொண்ட வள்ளுவரின் சிறப்புகளையும், அவர் இயற்றிய திருக்குறளின் மாண்புகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில்  டிடிஇஏ பள்ளிகளில் இவ்விழா கொண்டாடப்பட்டது. 
    இதையொட்டி,  பள்ளிகளின் முதல்வர்கள்  காயத்ரி (மந்திர்மார்க்),  மீனா சகானி (லக்ஷ்மிபாய் நகர்),   சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணபுரம்),  ஹரி கிருஷ்ணன் (மோதிபாக்),  துணை முதல்வர்கள்  சென்னா கிருஷ்ணன் 
    (ஜனக்புரி),  ரஞ்சன் குப்தா 
    (லோதி எஸ்டேட்), சித்ரா ராதாகிருஷ்ணன் (முதல்வர் பொறுப்பு- பூசா சாலை) ஆகியோர் தத்தமது பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வள்ளுவரின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.
     அதைத் தொடர்ந்து,  திருவள்ளுவர் குறித்து  மாணவர்களின் உரை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் இடம் பெற்றது. மாணவர்கள் குழுவாகப் பங்கேற்று திருக்குறள்களை ஒப்புவித்தனர். 
    திருக்குறள் கூறும் கருத்துகளையும் திருக்குறள்களையும் எழுதி பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தினர். 
    இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவர்களைத் தில்லி  தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலர் ஆர். ராஜு பாராட்டினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai