Enable Javscript for better performance
"பண்டிகைகளால் தூய்மை பாதிக்கப்படக் கூடாது'- Dinamani

சுடச்சுட

    

    மக்களால் ஆர்வத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளால் தில்லியின் தூய்மையும் சுகாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்று வடக்கு தில்லி மாநகராட்சியின் நிலைக் குழுத் தலைவர் திலக்ராஜ் கட்டாரியா புதன்கிழமை தெரிவித்தார். 
    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
    தில்லியில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சூரியன் மகர ராசிக்கு இடம் பெயரும் நிகழ்வை, மகர சங்கராந்தி, லோரி, பொங்கல் ஆகிய வெவ்வேறு பெயர்களால் தில்லியில் கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகைகளில் அனைத்து மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்த மக்களின் பண்டிகைகளில் நானும் கலந்து கொண்டேன். ஆனால், பண்டிகை முடிந்தவுடன் அந்த இடங்களை மக்கள் அசுத்தமாக விட்டுச் செல்வதைப் பார்த்தேன்.  பல இடங்களில் பிளாஸ்டிக் தட்டுகள், மீதமான உணவுகள் எல்லாம் அப்படியே வீசப்பட்டுள்ளதைக் கண்டேன். பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு காட்டும் ஆர்வத்தை பண்டிகைக்குப் பிறகு அந்தப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதிலும் மக்கள் காட்ட வேண்டும். அப்போதுதான் அந்தப் பண்டிகைக்கான நோக்கம் முழுமை பெறும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai