Enable Javscript for better performance
பின்தங்கியுள்ள சீலாம்பூர் பகுதியை மேம்படுத்துவேன்: மனோஜ் திவாரி- Dinamani

சுடச்சுட

    

    பின்தங்கியுள்ள சீலாம்பூர் பகுதியை மேம்படுத்துவேன்: மனோஜ் திவாரி

    By DIN  |   Published on : 18th January 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பின்தங்கியுள்ள சீலாம்பூர் பகுதியை, புது தில்லியை போல மேம்படுத்துவேன் என்று  பாஜகவின் தில்லி  தலைவர் மனோஜ் திவாரி  தெரிவித்தார். 
    வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் உள்ளது சீலாம்பூர் சட்டப்பேரவை தொகுதி. வட கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாஜகவின் தில்லி தலைவருமான மனோஜ் திவாரி புதன்கிழமை தனது சீலாம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டார். 
    சாஸ்திரி பார்க்கில் நடைபெற்று வரும் கருத்தரங்க மையக் கட்டுமானப் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும், சாஸ்திரி பார்க்கில் கிரிக்கெட் விளையாட்டரங்கம் அமைப்பதற்கு  நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார்.  
    இந்தப் பகுதியில் பெண்கள் கல்லூரி தொடங்குவது தொடர்பாக  மக்களின் கருத்துகளையும் அவர் கேட்டடறிந்தார். இது தொடர்பாக மனோஜ் திவாரி கூறியதாவது: 
    சீலாம்பூர் பகுதியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, சீலாம்பூர் பகுதி புது தில்லியை போல மேம்பாடு அடையும். 
    இதற்கு என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.  சாஸ்திரி பார்க்கில் கட்டப்பட்டு வரும் கருத்தரங்க மையம் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் வகையில் அமையும்.  இங்கே திரையரங்குகள், திருமண மண்டபங்களும்  அமையவுள்ளன. 
    இப்பகுதியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் இன்னும் ஆறு மாத காலத்தில் பூர்த்தி செய்யப்படும்.  
    இங்குள்ள பூங்காக்கள் அழகுபடுத்தப்படும். புதிய தெருக்கள் அமைக்கப்படும். உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai