Enable Javscript for better performance
மக்களின் அதிகாரத்தைப் பறிக்கவே ஆதார்: மத்திய அரசு மீது ராகுல் சாடல்- Dinamani

சுடச்சுட

    

    மக்களின் அதிகாரத்தைப் பறிக்கவே ஆதார்: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

    By DIN  |   Published on : 18th January 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொது மக்களின் அதிகாரத்தைப் பறிப்பதற்காக ஆதாரை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிப்பதற்காக ஆதார் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
    அரசின் சமூக நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கி மத்திய பாஜக அரசு உத்தரவிட்டது. அதேபோன்று, வங்கிக் கணக்கு, பான் அட்டை, செல்லிடப் பேசி சிம் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
    இதற்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆதார் விவகாரத்தில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையேயான வித்தியாசம் என்ன? என்பதை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
    ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மக்களுக்கு அதிகாரம் அளிக்க ஆதார் பயன்பட்டது. பாஜக ஆட்சியில் மக்களின் அதிகாரத்தைப் பறிப்பதற்கான கட்டாய ஆயுதமாக அது விளங்குகிறது. இதுவே இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்று அதில் ராகுல் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai