Enable Javscript for better performance
ரூ. 3 லட்சம் கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் ரூ. 3 லட்சத்திற்கான புதிய ரூ. 2 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தில்லி போலீஸாரின் சிறப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    தில்லி செங்கோட்டை அருகே ரூ. 3லட்சத்திற்கான கள்ள நோட்டுகளுடன் கடந்த 12-ம் தேதி ஒருவர் பிடிபட்டார். மேற்கு வங்கத்தில் இருந்து தில்லிக்குள் புழக்கத்தில் கள்ள நோட்டுகளை விட முயற்சி நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
    அவரிடம் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை தரமான பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளதால், கள்ள நோட்டுகள் என்பதை அடையாளம் காண்பதில் சிரமமாக இருந்தது. கைது செய்யப்பட்ட நபரின் பெயர் நரேந்தர் என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக கள்ள நோட்டுகள் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
    2016-ம் ஆண்டு 1000 ரூபாய் கள்ள நோட்டுகளை வைத்திருந்ததாக ராஜஸ்தான் போலீஸார் நரேந்தரை கைது செய்திருந்தனர். உயர் மதிப்புடை ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டபோது சில மாதங்களுக்கு அவருக்கு கள்ள நோட்டுகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு மேற்கு வங்க மாநிலம் பரக்காவில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி, நரேந்தர் விநியோகம் செய்து வந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai