Enable Javscript for better performance
வகுப்பறை சிசிடிவி காட்சிகளை பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி: கேஜரிவால்- Dinamani

சுடச்சுட

    

    வகுப்பறை சிசிடிவி காட்சிகளை பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி: கேஜரிவால்

    By DIN  |   Published on : 18th January 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வகுப்பறை சிசிடிவி காட்சிகளை செல்லிடப் பேசியில் பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி செய்து தரப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். இது குறித்து அவர் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: 
    அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினேன். வகுப்பறைகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை பெற்றோர்கள் பார்ப்பதற்கு விரைவில் வசதி செய்யப்படும். இதன் மூலம் கல்வித் துறையில் வெளிப்டைத் தன்மை உருவாகும். குழந்தைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்' என்று தெரிவித்துள்ளார். 
    இதேபோல், தில்லி அரசு மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகள், பாலி கிளினிக்குள் ஆகியவற்றை ஒன்றிணைக்க சர்வதேச தரத்திலான மேலான்மை தகவல் தொழில்நுட்பத்தை உருவாக்க தில்லி சுகாதாரத் துறைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
    இந்தத் தகவலை தனது சுட்டுரையில் கேஜரிவால் புதன்கிழமை பதிவு செய்துள்ளார். அதில், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தில்லி அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தில்லி அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், கடந்த ஆண்டு புறநோயாளிகள் பிரிவு நேரத்தை காலை 8 மணி முதல் மதியும் இரண்டு மணி வரை நீட்டிக்கப்பட்டது. முன்பு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் புற நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai