Enable Javscript for better performance
வட மேற்கு தில்லியில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்- Dinamani

சுடச்சுட

    

    வட மேற்கு தில்லியில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்

    By DIN  |   Published on : 18th January 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட மேற்கு புறநகர் தில்லியின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
    இது குறித்து வாரியத்தின் உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: 
    பவானா குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்காக கராலாவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கராலா,  மாஜ்ரி, மதன்பூர், தபஸ், ரசூல்பூர்,  ராணி கேரா, கஞ்சாவாலா, லத்பூர், ஜோந்தி, தத்தேஷ்வர், ஜிமர்புரா, நிஜாம்புரா, கரி ரந்தவா, விஜய் நகர், பூத் குர்த், இந்திராஜி காலனி, ஈஷ்வர் காலனி, கிருஷ்ணா விஹார், சுல்தான்பூர் தபஸ் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். 
    இதேபோல சங்கம் விஹார், அம்பேத்கர் நகர் சட்டப்பேரவைக்கு தொகுதிகளுக்கு உள்பட்ட ரதிலா மார்க்,  மங்கள் பாஜார், திக்ரி காலனி, திக்ரி விரிவாக்கம்,  திக்ரி டிடிஏ குடியிருப்பு, தேவ்லி விரிவாக்கம்,  தேவ்லி வங்கி குடியிருப்பு,  துர்கா விஹார், தேவ்லி குடிசைப் பகுதி, துக்கல் காலனி,  கிருஷ்ணா பார்க்,  கான்பூர் விரிவாக்கம், சிவ் பார்க், ஜவாஹர் பார்க், பிகாரி பார்க் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். 
    அதாவது வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரையிலும் (அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை)  ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி குடிநீர் விநியோகம்  இருக்கும். 
    எனவே, குடியிருப்புவாசிகள் போதுமான குடிநீரை கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். 
    குடிநீர் டேங்கர் லாரிகளைப் பெற மத்தியக் கட்டுப்பாட்டு அறை (1916, 23527679, 23513073, 1800117118), கிரி நகர் (26473720, 26449877), பச்சீம் விஹார் (25281197),  ஜனக்புரி டி- பிளாக் (28521123), துவாரகா (25692089), கிரேட்டர் கைலாஷ் (29234746, 29234747) ஆகியவறைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai