Enable Javscript for better performance
22 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது: 6 கார்கள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    22 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது: 6 கார்கள் மீட்பு

    By DIN  |   Published on : 18th January 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருட்டு வழக்குகளில் தொடர்புடைய போதைக்கு அடிமையான இரு இளைஞர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 திருட்டுக் கார்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இது குறித்து தில்லி காவல் துறை குற்றப் பிரிவு இணை ஆணையர் அலோக் குமார் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: 
    ஜனவரி 12-ஆம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷெராவத் தலைமையிலான போலீஸார் வடமேற்கு தில்லி, ரோஹிணி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருட்டில் கிடைத்த பொருள்களை விற்பதற்காக வந்த தில்லியைச்சேர்ந்த சாகர் (எ) சூரஜ், சஞ்சய் மன்னு (எ) வேத் ராம் சர்மா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் மோட்டார் வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டது, வீடுகள், கடைகளில் திருடியது உள்பட 22 திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
    இதையடுத்து, இருவரிடமிருந்தும் 6 திருட்டுக் கார்கள், 2 எல்சிடிகள், 3 திருட்டு செல்லிடப்பேசிகள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், திருட்டுக் கார்களில் அண்மையில் ரோஹிணியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மருத்துவமனைப் பகுதியில் திருட்டுப் போன ஒரு போலீஸ் அதிகாரியின் காரும் இடம் பெற்றுள்ளதும், கைதான இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல் அதிகாரி அலோக் குமார் தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai