Enable Javscript for better performance
ஆறடுக்கு வாகன நிறுத்தும் மையம்: பணிகளை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஆறடுக்கு வாகன நிறுத்தும் மையம்: பணிகளை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

    By DIN  |   Published on : 19th January 2018 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட கிருஷ்ணா நகரில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் ஆறடுக்கு வாகன நிறுத்தும் மையப்பணிகளை விரைந்து முடிக்குமாறு மேயர் நீமா பகத் உத்தரவிட்டார்.
     கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட ராம் கோஹலி மார்க், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மேயர் நீமா பகத் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது இப்பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். கிருஷ்ணா நகரில் கட்டப்பட்டு வரும் ஆறடுக்கு வாகன நிறுத்தும் மையப் பணிகளை மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், கீதா காலனியில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் பணிகளையும் அவர் பார்வையிட்டார். ராஜா ராம் கோஹலி மார்க்கில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் கேட்டறிந்தார். அப்போது போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai