Enable Javscript for better performance
சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட  நபருக்கு 3 ஆண்டு சிறை: கருணை காட்ட நீதிமன்றம் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட  நபருக்கு 3 ஆண்டு சிறை: கருணை காட்ட நீதிமன்றம் மறுப்பு

    By DIN  |   Published on : 19th January 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையைக் குறைக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    மேலும், இந்த குற்றச்சம்பவத்தை சோனு (21) திட்டமிட்டு செய்துள்ளதாலும், இது பாதிக்கப்பட்டவரின் மனதில் நிரந்தர வடுவாக அமைந்திருக்கும் என்பதால் தண்டனையை குறைப்பதில் கருணைக் காட்ட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
    பழைய மெஹரூளி சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த சோனு பறித்து சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் சோனுவை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
    இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம்  சோனுவுக்கு, திருடிய குற்றத்திற்காக  3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தாக்குவது அல்லது கொள்ளையடிக்கும்போது கிரிமினல் குற்றத்தில் ஈடுபடுவது குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
    இந்த இரண்டு தண்டனை காலங்களையும் சோனு ஒன்றாக சேர்ந்து அனுவிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    இந்த உத்தரவுக்கு எதிராக சோனு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஹரீஷ் துதானி வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவின் விவரம்:
    மோட்டார் சைக்களில் பின்னால் அமர்ந்து கொண்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை சோனு பறித்துள்ளார். இந்த குற்றச்சம்பவத்தை சோனு (21) திட்டமிட்டு செய்துள்ளார். இது பாதிக்கப்பட்டவரின் மனதில் நிரந்தர வடுவாக எப்போதும் அமைந்திருக்கும். ஆகையால்,  இந்த குற்றத்தின் தன்மையையும், செய்யப்பட்ட விதத்தையும் பார்க்கும்போது, கீழ் நீதிமன்றம் சோனுவுக்கு விதித்த தண்டனை காலம் பொருத்தமானதுதான். சோனுவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai