Enable Javscript for better performance
சட்டப்பேரவை மூன்று நாள் கூட்டத்தால் பயனில்லை: விஜேந்தர் குப்தா- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவை மூன்று நாள் கூட்டத்தால் பயனில்லை: விஜேந்தர் குப்தா

    By DIN  |   Published on : 19th January 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூன்று நாள்கள் நடைபெற்ற தில்லி சட்டப்பேரைக் கூட்டத்தால் எவ்வித பயனும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
    இது குறித்து அவர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றது. 
    இக்கூட்டத் தொடரால் தில்லியில் தற்போது விவாதிக்கப்படும் முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலவில்லை. பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதால் தனது கண்ணியத்துக்கு குறைவு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நினைக்கிறார். சீலிங் நடவடிக்கை, குளிரால் ஏற்படும் இறப்புகள், இரவு நேர தங்கும் குடில்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்து கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவில்லை. பேரவையில் பெரும்பான்மை இருக்கிற காரணத்தால் ஆற்ற வேண்டிய கடமையை ஆளும் கட்சி ஆற்றுவதில்லை.
     இக்கூட்டத் தொடர் சீலிங் நடவடிக்கைக்காக கூட்டப்பட்டது. ஆனால், சீலிங் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு தீர்வை அளிப்பதற்குப் பதிலாக பேரவையில் வணிகர்களை திசை திருப்பி, அரசியலாக்கப்பட்டது. 
    ஹஜ் பயணத்துக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தி, அதற்குப் பதிலாக முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடும் மத்திய அரசின் முடிவுக்கு பாராட்டு தெரிவிக்க அவையில் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் திருப்தி அளிக்கவில்லை என்றார் விஜேந்தர் குப்தா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai