Enable Javscript for better performance
சீல் நடவடிக்கை விவகாரம்: சரியான ஆவணங்களை வைத்துள்ளவணிக வளாகங்களுக்கு விலக்கு- Dinamani

சுடச்சுட

    

    சீல் நடவடிக்கை விவகாரம்: சரியான ஆவணங்களை வைத்துள்ள வணிக வளாகங்களுக்கு விலக்கு

    By DIN  |   Published on : 19th January 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உருமாற்றக் கட்டண ரசீது, பார்க்கிங் ரசீது, கடையின் பத்திரம் போன்ற முக்கியமான ஆவணங்களை சரியாக வைத்துள்ள வணிக வளாகங்கள் சீல் வைக்கப்பட்டிருந்தால், அவற்றுக்கு சீல் வைப்பு நடவடிக்கையில் இருந்து விலக்களிக்க தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) தயாராக உள்ளது என்று அதன் நிலைக் குழுத் தலைவர் பூபேந்திர குப்தா தெரிவித்தார். 
    சரியான ஆவணங்கள் வைத்திருந்தாலும், தங்களுடைய வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படுவதாக வணிகர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். 
    இந்நிலையில், புபேந்தர் குப்தா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீல் வைக்கப்பட்ட வணிக வளாகங்களின் ஆவணங்களைச் சரிபார்கும்படி தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டலங்களின் துணை ஆணையர்களை கேட்டுக் கொண்டுள்ளேன். ஆவணங்கள் சரியாக வைத்திருந்தும் வணிக வளாகங்கள் சீல் வைக்கப்பட்டிருந்தால் அவை மீண்டும் செயல்பட தெற்கு மாநகராட்சி உதவி செய்யும். மேலும், சீல் வைக்கப்பட்டுள்ள வணிக வளாகங்களுக்குள் முக்கியமான ஆவணங்கள், பொருள்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை எடுத்துக் கொள்ளும் வகையில் தாற்காலிக "டி சீலிங்' நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai