Enable Javscript for better performance
"யமுனை ஆக்ஷன் பிளான் - 3' கட்கரியுடன் முதல்வர் கேஜரிவால் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    "யமுனை ஆக்ஷன் பிளான் - 3' கட்கரியுடன் முதல்வர் கேஜரிவால் சந்திப்பு

    By DIN  |   Published on : 19th January 2018 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "யமுனை ஆக்ஷன் பிளான்-3' திட்டம் தொடர்பாக மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
    இச்சந்திப்புக்கு குறித்து தில்லி அரசு உயரதிகாரி கூறியதாவது: 
    யமுனை ஆக்ஷன் பிளான் தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் கேஜரிவால் சந்தித்தார். தில்லி குடிநீர் வாரியம் செயல்படுத்தி வரும் 8 திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும் என்றும், திட்டங்களை மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யுமாறும் அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார். சுத்திகரிக்கப்படும் நீரை தோட்டப் பயன்பாடு, கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றுக்கு சந்தைப்படுத்துமாறும் தில்லி அரசுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார் என்றார் அந்த அதிகாரி.  இச்சந்திப்பின்போது, தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், தில்லி டயலாக் கமிஷன் துணைத் தலைவர் ஆஷிஷ் கேதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
    யமுனை ஆக்ஷன் பிளான்-3: தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் "யமுனை ஆக்ஷன் பிளான் -3' என்ற திட்டம் ரூ. 1,656 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் யமுனை நதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள வழித்தடங்களை சீர் செய்யவும், ஓக்லா, கோண்ட்லி, ரிதாலா ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்தவும் யமுனை ஆக்ஷன் பிளான் -3 என்ற திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை தில்லி குடிநீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai