Enable Javscript for better performance
ஷீலா தீட்சித்தின் சுயசரிதை: 27-ம் தேதி வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லியின் மூன்று முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித்தின் சுயசரிதை வருகிற 27-ம் தேதி வெளியிடப்படுகிறது.
    "தில்லிவாசிகள்: எனது பயணம், எனது வாழ்க்கை' என்று சுயசரிதைக்கு ஷீலா தீட்சித் பெயரிட்டுள்ளார். 1984-ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய ஷீலா தீட்சித் அதே ஆண்டில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னோசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று மக்களவை உறுப்பினரானார். அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தில்லியின் முதல்வராக ஷீலா தீட்சி வெற்றி பெற்று முதல்வர் பதவி வகித்தார்.
    நேரு - காந்தி குடும்பத்தினருடன் நீண்ட நாள் தொடர்பில் இருந்தவரும், சுதந்திர போராட்ட வீரரும், மூத்த அரசியல்வாதியுமான உமா சங்கர் தீட்சித்தின் மருமகளானஷீலா தீட்சித், அரசியலுக்கு எப்படி நுழைந்தார் என்பதை இந்த சுயசரிதையில் விரிவாக எழுதியுள்ளார்.
    இதுகுறித்து ஷீலா தீட்சித் கூறுகையில், "ஒரு சராசரி இந்தியப் பெண் நவீன அணுகுமுறையில் தனது வாழ்க்கையில் எடுத்த முக்கிய முடிவுகள் குறித்தும், அதற்கான பொறுப்புகள் குறித்தும் எனது சுயசரிதையில் திரும்பி பார்த்துள்ளேன்' என்றார். இந்த சுயசரிதை ஜெய்பூரில் வருகிற 27-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசியலுக்கு ஷீலா தீட்சித் வர விரும்பாததற்கான காரணம் குறித்தும் இந்த சுயசரிதையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai