அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப துணைநிலை ஆளுநருக்கு முதல்வர் கடிதம்
By DIN | Published on : 20th January 2018 12:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு அவர் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, குறிப்பாக மருந்தாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநரை கடந்த வாரம் கேஜரிவால் சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது தில்லி அரசு மருத்துமனைகளில் காலியாகவுள்ள 2,169 பணியிடங்களை நிரப்பு ஓய்வு பெற்றவர்களை மீண்டும் நியமிக்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுபோன்ற முக்கிய முடிவுகள் தொடர்பான கோப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தெரிவிக்காமல் மறைக்க வேண்டாம் என உரிய உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.