Enable Javscript for better performance
ஆக்ரா - லக்னௌ விரைவுச் சாலை சங்கக் கட்டண  வசூல் தொடக்கம்: ஓட்டுநர்களுக்கு இலவச "டீ' சேவை- Dinamani

சுடச்சுட

    

    ஆக்ரா - லக்னௌ விரைவுச் சாலை சங்கக் கட்டண  வசூல் தொடக்கம்: ஓட்டுநர்களுக்கு இலவச "டீ' சேவை

    By DIN  |   Published on : 20th January 2018 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆக்ரா - லக்னௌ விரைவுச் சாலைக்கான சுங்கக் கட்டண வசூல் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 
    இதன்படி 302 கி.மீ. தூரம் கொண்ட இந்த விரைவுச் சாலையைப் பயன்படுத்தும் கார்-ஜீப்-வேன்-இலகு ரக வாகனங்கள் ரூ. 570-ம், இலகு ரக வர்த்தக வாகனங்கள் - மினி பஸ்கள் ரூ. 905-ம், டிரக் - பஸ்கள் ரூ. 1,815, கனரக கட்டுமான இயந்திரங்கள் - பெரிய வாகனங்கள் ரூ. 2,785-ம், 7 மற்றும் அதற்கு அதிகமான ஆக்ஸில்களைக் கொண்ட பெரிய வாகனங்கள் ரூ. 3,575-ம் சுங்கக்கட்டனமாக செலுத்த வேண்டும்.
    ஆக்ரா - லக்னௌ விரைவுச்சாலைக்கான சுங்கக் கட்டணங்களை உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆத்தியநாத் தலைமையிலான அரசு நிர்ணயித்துள்ளது. 
    இந்த சாலைக்கான சுங்கக் கட்டணம் அதிகமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து உத்தரப் பிரதேச விரைவுச் சாலை மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி கூறுகையில், "லக்ளென-கான்பூர்-ஆக்ரா விரைவுச் சாலையைப் பயன்படுத்தினால் 364 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும். 
    இதற்காக ரூ. 390 சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஆக்ரா - லக்னௌ விரைவுச் சாலையை பயன்படுத்தினால் வெறும் 302 கி.மீ. தூரத்தில் கடந்துவிடலாம். இதனால் எரிபொருளும், நேரமும் மிச்சமாகும்.
    இந்த விரைவுச் சாலையில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள், முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், பத்மா விருது பெற்றவர்கள் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
     இந்த விரைவுச் சாலையில் இந்திய விமானப் படையின் அதிநவீன போர் விமானங்களான மிரேஜ், சுகோய் 30, மிக் மற்றும் சி - 130 ஜே சூப்பர் ஹேர்க்கில்ஸ் ஆகியவை தறையிறக்கப்பட்டு இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
     இந்த சாலையில் 9 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர போலீஸ் வாகனங்களும், ஆம்புலன்ஸ் சேவைகளும் உள்ளன. இரவு நேரத்தில் லாரி, பஸ் ஓட்டுநர்கள் தூக்கத்தில் இருந்து விடுபட இலவச டீ வழங்கப்படும்' என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai