Enable Javscript for better performance
குழந்தை இல்லாத ஏக்கத்தில்  இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குழந்தை இல்லாத ஏக்கத்தில்  இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

    By DIN  |   Published on : 20th January 2018 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். எனினும், குழந்தை பெற்றெடுக்க முடியாததால் மாமனார் வீட்டினர் துன்புறுத்தியதாலேயே அவர் தற்கொலை செய்ய நேர்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
    துக்ளகாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப். இவரது மனைவி ரஜ்னி. சந்தீப் தில்லி மெட்ரோவில் பயணச்சீட்டு வழங்கும் வேலை செய்து வருகிறார். 
    இந்நிலையில், இவரது மனைவி ரஜ்னி வியாழக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. 
    இருவருக்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்ததால் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் சந்தீப்பிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
    இந்நிலையில், ரஜ்னியின் தந்தை பாலு ராம் போலீஸில் அளித்துள்ள புகாரில், "எனது மகள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் குழந்தை பெற்றெடுக்கவில்லை எனக் கூறி மாமானர் வீட்டினர் துன்புறுத்தினர். 
    மேலும், எங்களிடமிருந்து கூடுதல் வரதட்சிணை வாங்கி வரச் சொல்லி எனது மகளை அவர்கள் கொடுமைப்படுத்தினர்' என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் சந்தீப்புக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai