Enable Javscript for better performance
சமூகப் பணிக் கல்வி: தில்லியில் தேசிய மாநாடு மார்ச் 14-இல் நடக்கிறது- Dinamani

சுடச்சுட

    

    சமூகப் பணிக் கல்வி: தில்லியில் தேசிய மாநாடு மார்ச் 14-இல் நடக்கிறது

    By DIN  |   Published on : 20th January 2018 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமூகப் பணிக் கல்வி தொடர்பான தேசிய மாநாடு தில்லியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
    இது குறித்து தில்லி பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தில்லி பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கல்லூரி, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேச ஹிந்தி பல்கலைக்கழகம் ஆகியவை  இணைந்து,  "இந்திய சமூகப் பணி: வாய்ப்பும், சவால்களும்' என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன. 
    இந்த மாநாடு மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கல்லூரியில் நடைபெறும். மகாத்மா காந்தி சர்வதேச ஹிந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிரீஷ்வர் மிஸ்ரா, பாரதிய ஷிக்ஷன் மண்டலின் அகில இந்திய செயலாளர் முகுல் கணித்கர், பாரதிய வித்யாபீடத்தின் பேராசிரியர் பி.டி. லாவணி உள்ளிட்ட கல்வியாளர்கள் பலர்  பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai