Enable Javscript for better performance
டிடிசி பேருந்து மோதி உயிரிழந்த பெண்ணின்  குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    டிடிசி பேருந்து மோதி உயிரிழந்த பெண்ணின்  குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு

    By DIN  |   Published on : 20th January 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்து மோதி உயிரிழந்த 24 வயது பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
    2012, அக்டோபர் 4-ம் தேதி, தனது உறவினருடன் தரங்க் சர்மா மோட்டார் சைக்கிளில் நரேலாவில் உள்ள கடேவரா கிராமத்துக்கு சென்றார். 
    அப்போது வேகமாக வந்த டிடிசி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே சர்மா உயிரிழந்தார்.
    இந்த விபத்தால்தான் தரங்க் சர்மா உயிரிழந்தார் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று பேருந்தை காப்பீடு செய்திருந்த நிறுவனம் வாதிட்டது. மேலும், பேருந்தை வேகமாக ஓட்டவில்லை என்று ஓட்டுநரும் மறுத்தார். 
    இதையடுத்து, வாகன இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயத்தின் தலைவர் வித்யா பிரகாஷ்,  மருத்துவமனையில் தரங்க் சர்மாவுக்கு அளிக்கப்பட்ட கட்டண ரசீது, இறுதிச் சடங்குக்கான செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றின் அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 15, 97,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். 
    மேலும், டிடிசி பேருந்து ஓட்டுநர் அஜாக்கரதையாகவும், வேகமாகவும் ஓட்டி ஏற்படுத்திய விபத்தின் காரணமாகதான் சம்பவ இடத்திலேயே தரங்க் சர்மா உயிரிழந்துள்ளார் என்றும் தீர்ப்பாயத்தின் தலைவர் உறுதி செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai