Enable Javscript for better performance
தலைநகரில் கடந்த ஆண்டில் கொள்ளை வழக்குகள் 38% குறைந்தது- Dinamani

சுடச்சுட

    

    தலைநகரில் கடந்த ஆண்டில் கொள்ளை வழக்குகள் 38% குறைந்தது 

    By DIN  |   Published on : 20th January 2018 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் கடந்த ஆண்டில் கொள்ளை வழக்குகள் 38.21 சதவீதம் அளவுக்கு குறைந்திருந்ததாக  தில்லி காவல் துறையினர் வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரியவந்துள்ளது.
    தில்லியில் அண்மையில் தில்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் கடந்த ஆண்டில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரத் தகவல் அறிக்கையை வெளியிட்டார்.  
    அதில், 2016-ஆம் ஆண்டுடன்  ஒப்பிடுகையில் தில்லியில் 2017-இல் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை 38.21 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,   2016-ஆம் ஆண்டில் தில்லியில் 4,585 கொள்ளை வழக்குகள் பதிவாகின.  இது கடந்த ஆண்டு 2, 833 ஆகக் குறைந்துள்ளது.  இவற்றில் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.  4,257 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதேபோன்று,  தில்லியில் 2016-இல் 45 வழிப்பறிக் கொள்ளைகள் நிகழ்ந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  ஆனால்,  2017-இல் இந்த எண்ணிக்கை 36 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai