Enable Javscript for better performance
போபால் தமிழ்ச் சங்கம் சார்பில்நாளை பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள போபால் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.
    போபால் கோவிந்த்புராவில் உள்ள கேரியர் கல்லூரி கலையரங்கில் காலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல.கணேசன், கௌரவ விருந்தினர்களாக வேலூர் விஐடி பல்கலைகழக நிறுவனர்- வேந்தர் ஜி.விஸ்வநாதன், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை துணைத் தலைவர் யு. சக்திபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
    "மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பெரிதும் துணை நிற்பது சொத்து சுகமா? சொந்த பந்தமா?' எனும் தலைப்பில் இன்னிசை கலந்த சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது. ப.அறிவழகன் நடுவராகப் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள் அறிமுகம் செய்து வைக்கிறார்.
    நாட்டியக் கலைஞர் சரோஜா வைத்தியநாதனின் மாணவிகள் பங்கு பெறும் பரத நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெறும். 
    இந்த நிகழ்வின் போது போபால் தமிழ்ச் சங்க விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை போபால் தமிழ்ச் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai