Enable Javscript for better performance
முதல்வர் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: பாஜக, காங்கிரஸ் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: பாஜக, காங்கிரஸ் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 20th January 2018 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜரிவால் விலக வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தில்லி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    இதுகுறித்து பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி கூறியதாவது: இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்களை இவ்வளவு காலம் பதவியில் இருக்க தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கக் கூடாது. எனினும், ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்களை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து கேஜரிவால் விலக வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விசாரணை ஒத்திவைப்புகள் மூலம் 20 எம்எல்ஏக்களும் தில்லி மக்களை மோசடி மட்டும் செய்யாமல் வளர்ச்சியையும் தடுத்துள்ளனர். விசாரணை தாமதத்தை ஆம் ஆத்மி கட்சி, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மூன்று பேரை மாநிலங்களவைக்கும் அனுப்பிவிட்டது. இத்தகைய நடைமுறையால் மாநிலங்களவையின் பெயருக்கு அக்கட்சி களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர். 
    காங்கிரஸ்: இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 
    முதல்வர் பதவியில் கேஜரிவால் தொடர்வதற்கு எந்தவித உரிமையும் இல்லை. அவரது அமைச்சரவையில் பாதிப் பேர் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் நீக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பதவிக்கான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்த 20 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். லோக்பால் எங்கே? எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் அதிகாரத்தையும், வெளிநாட்டு பயணங்களையும் அனுபவித்து வருகின்றனர். எங்கே அரசியல் நேர்மை இருக்கிறது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai