Enable Javscript for better performance
ஓடும் ரயில் முன் குதித்து முதியவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஓடிக் கொண்டிருந்த மெட்ரோ ரயில் முன் குதித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
    தில்லி, துவாரகா செக்டார் 12-இல் உள்ள மெட்ரோ ரயில் நிலைய நடைமேடையில் சனிக்கிழமை காலை சுமார் 8 மணியளவில் முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
    அப்போது, அவ்வழியாக சென்ற ரயில் முன்பாக திடீரென குதித்தார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார்.
    முதியவர் ரயில் முன் குதித்ததால் அவ்வழியாக சென்ற ரயில்களின் இயக்கத்தில் சில நிமிடங்கள் தடங்கல் ஏற்பட்டது. இறந்தவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அவர் துவாரகா பகுதியைச் சேர்ந்த தீபக் சோப்ரா (67) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai