Enable Javscript for better performance
தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் திருநாள் சிறப்புப் பட்டிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் திருநாள் சிறப்புப் பட்டிமன்றம்

    By DIN  |   Published on : 21st January 2018 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை பட்டிமன்றம் நடைபெற்றது."வாழ்வில் அமைதியும், மகிழ்வும் தருவது கிராம வாழ்க்கையா? நகர வாழ்க்கையா?'என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
    திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் நடைபெற்ற இப்பட்டிமன்றத்தில், கிராம வாழ்க்கை என்ற தலைப்பில் கவிஞர் இனியவன், மதுரை சங்கர் ஆகியோரும், நகர வாழ்க்கை என்ற தலைப்பில் கோவை தனபால், கடலூர் தணிகைவேல் ஆகியோரும் வாதிட்டனர்.
    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆணையத்தின் இணை ஆணையர் முருகன், தில்லி காவல் துறையின் துணை ஆணையர் சத்தியசுந்தரம் ஐ.பி.எஸ், தமிழ்நாடு சட்டக் குழுமத்தின் தலைவர் சந்திரமோகன், தமிழ்நாடு வணிக வரி துறையின் துணை ஆணையர் மதுசூதனன், சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பட்டிமன்றத்திற்கு தலைமை வகித்த ஐ.லியோனி மற்றும் பேச்சாளர்களை சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், இணைச் செயலாளர்கள் ரமாமணி சுந்தர், பாலமூர்த்தி, பொருளாளர் எம். சத்தியமூர்த்தி, இணைப் பொருளாளர் கே. கணேசன் மற்றும் நிர்வாகிகள் கெளரவித்தனர் .
    நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் பேசுகையில், "தில்லியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு தில்லி அரசில் இட ஓதுக்கீடு இல்லை. மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான இட ஓதுக்கீடு இல்லை. எனவே, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று தர வேண்டும்' என்று தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆணையத்தின் இணை ஆணையர் முருகனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
    இது குறித்து நிகழ்ச்சியில் முருகன் பேசுகையில், "தமிழகத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, மற்ற மாநிலங்களிலும் இப்பிரச்சனை உள்ளது. இருப்பினும், தில்லி அரசில் இதற்கான தீர்மானம் கொண்டு வந்து, அந்த சமூகத்தினருக்கு இட ஓதுக்கீடு கிடைக்க முயற்சி செய்கிறேன்' என்றார்.
    இன்று நாட்டுப்புற இசை நிகழ்ச்சி
    தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.25 மணிக்கு நடைபெறும் பொங்கல் விழாவில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முக்கிய விருந்தினராக பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் சென்னை கார்த்திக் இசைக் குழுவினருடன் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் வழங்கும் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai