Enable Javscript for better performance
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் 1,189 புகார்கள்- Dinamani

சுடச்சுட

    

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 1,189 புகார்கள் கிடைக்கப்பெற்றதாகவும், அவற்றில் 1,050 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக அந்த ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:
    நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம்களிடம் இருந்து மொத்தம் 907 புகார்கள் கிடைக்கப்பெற்றன. அவர்களுக்கு அடுத்தபடியாக மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் சிறுபான்மையினரான பார்ஸி இனத்தவர்கள் 3 புகார்கள் அளித்திருந்தனர்.
    கிறிஸ்தவர்கள் (74 புகார்கள்), சீக்கியர்கள் (65), ஜைனர்கள் (37), பௌத்தரக்ள் (13 புகார்கள்) அளித்திருந்தனர். இவர்களைத் தவிர, வேறு சில சிறுபான்மையினர்களிடமிருந்து 90 புகார்கள் வந்தன.
    ஒட்டுமொத்தமாக 1,189 புகார்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில், 707 புகார்கள் சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்டவையாகும்.
    சேவைகள், கல்வி, வக்ஃபு, மத உரிமைகள் ஆகியவை தொடர்பாக முறையே 101, 65, 42, 40 புகார்கள் கிடைக்கப்பெற்றன. வேறு சில பிரச்னைகளை முன்வைத்து 225 புகார்கள் வந்தன என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சையது கயோருல் ஹஸன் ரிஸ்வி கூறுகையில், "சிறுபான்மையினர்களிடமிருந்து கிடைப்பெற்ற புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai