Enable Javscript for better performance
பிப்.15-க்குப் பிறகு "பார்கோடு ஸ்கேனிங்' மூலம் மது விற்பதை உறுதிப்படுத்த தில்லி அரசு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பிப்.15-க்குப் பிறகு "பார்கோடு ஸ்கேனிங்' மூலம் மது விற்பதை உறுதிப்படுத்த தில்லி அரசு உத்தரவு

    By DIN  |   Published on : 21st January 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுத்த மாதம் 15-ஆம் தேதியில் இருந்து பார்கோடு ஸ்கேனிங் மூலம் மதுபானம் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் உள்ள அனைத்து மதுபான விற்பனையகங்களுக்கும் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
    இது தொடர்பாக தில்லி அரசின் கலால் துறை, தலைநகரில் உள்ள அனைத்து மதுபான விற்பனையகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், "பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு பார்கோடு ஸ்கேனிங் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்துள்ளது.
    இதுகுறித்து தில்லி அரசின் உயர் அதிகாரி கூறியதாவது:
    தில்லியில் உள்ள மதுபான விற்பனையகங்களில் மதுபானம் வழக்கமாக பார்கோடு ஸ்கேனிங் செய்த பிறகு விற்கப்பட்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் இணையதளத் தொடர்பு மோசமாக இருப்பதாக காரணம் கூறி இந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது. இதனால், தில்லியில் உள்ள அனைத்து மது விற்பனையகங்களின் பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவில், "பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு ஸ்கேனிங் முறை மூலம் 100 சதவீதம் மது விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும்' என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    ஸ்கேனிங் இல்லாமல் மது விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் உரிம விதிகள் மற்றும் நிபந்தனைகளின்படி தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும். பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு கலால் துறை அதிகாரிகள் மதுபான விற்பனையகங்களுக்கு சென்று உத்தரவு விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த சோதனையில் ஈடுபடுவர். விதிமுறைகளை பின்பற்றாத மதுபான கடைகளின் உரிமங்கள் ரத்து செய்வது உள்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார் அந்த அதிகாரி.
    கடந்த ஆண்டு ஏப்ரலின்போது கலால் துறை மதுபான விநியோகத்திற்கான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதன்படி, நகரில் உள்ளஅனைத்து மது விநியோக மையங்களிலும் தங்குதடையின்றி மதுபானம் விற்பதை உறுதிப்படுத்தும் வகையில் விற்பனைக்காக அனைத்து அனுமதிபெற்ற பிராண்டுகளின் மது வகைகளை ஒருவார காலம் கைவச இருப்பு
    இருப்பதை உறுதிபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருநத்து. தவிர, வாரத்தின் முதல் நாளில் தங்கள் கைவசம் உள்ள மதுபானம் இருப்பு குறித்த தகவலை கலால் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் மது விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai