Enable Javscript for better performance
ஷாதரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து இளைஞர் சாவு: 4 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஷாதரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து இளைஞர் சாவு: 4 பேர் காயம்

    By DIN  |   Published on : 21st January 2018 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஷாதரா மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை கார் கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது:
    தில்லி தேசியத் தலைநகர் வலயம் காஜியாபாத்தை சேர்ந்தவர்கள் அனில் குமார் (23), தர்மேந்திர சிங், மிர்ஸா குல்ஜார், தர்மேந்தர் தஸ்லிம். இவர்கள் வெள்ளிக்கிழமை தில்லி செங்கோட்டைக்கு சுற்றுலா வந்தனர். செங்கோட்டையைப் பார்த்து விட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தஸ்லிம் ஓட்டிச் சென்றார்.
    ஷாதரா மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் அனில் குமார் உயிரிழந்தார். தர்மேந்திர சிங், மிர்ஸா குல்ஜார், தர்மேந்தர், தஸ்லிம் ஆகிய நால்வரும் காயமடைந்தனர். அவர்கள் தில்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai