Enable Javscript for better performance
"ஸ்பா' மையத்தில் பாலியல் தொழில்: 9 பெண்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    உடல் மசாஜ் (ஸ்பா) சேவை அளிக்கப்படும் மையத்தில் பாலியல் தொழில் நடத்தியதாக 9 பெண்களை குருகிராம் போலீஸார் கைது செய்தனர்.
    இதுகுறித்து குருகிராம் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீந்திர குமார் கூறியதாவது:
    தேசியத் தலைநகர் வலயம், குருகிராமில் உள்ள எம்ஜி சாலையில் எம்ஜிஎஃப் மெகாசிட்டி மால் எனும் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உடல் மசாஜ் சேவையை அளிக்கும் "நேச்சர் ஸ்பா' மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
    இதையடுத்து, குருகிராம் காவல் துறையின் காவலர் ஒருவர் வாடிக்கையாளர் போல அந்த மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். மையத்தில் இருந்த வரவேற்பாளர் காவலரிடம், உடல் மசாஜ் செய்வதற்கும், பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,500 செலுத்த வேண்டும் என்று கேட்டார்.
    அப்போது, போலீஸார் மையத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், வாட்ஸ் அப், முகநூல் மூலம் வாடிக்கையாளர்களைத் தேடும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
    இதையடுத்து, இத்தொழிலில் ஈடுபட்டதாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நான்கு பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான நபர்கள், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai