Enable Javscript for better performance
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: மத்திய அரசு மீது கேஜரிவால் சாடல்- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: மத்திய அரசு மீது கேஜரிவால் சாடல்

    By DIN  |   Published on : 22nd January 2018 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதிநீக்க விவகாரத்தில், மத்திய அரசை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார்.
    தில்லியின் நஜஃப்கர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது:
    உண்மையின் வழியில் ஒருவர் பயணித்தால், அவர் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தில்லி அரசின் ஒரு பைசாவைக் கூட நாங்கள் வீணாக்கவில்லை. ஆனால், எங்களது வழியில் பல்வேறு இடையூறுகள் வருகின்றன. அனைத்து வகையிலும், அவர்கள் (பாஜக) எங்களை துன்புறுத்த முயற்சிக்கின்றனர். எங்களது எம்எல்ஏக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. எனது அலுவலகத்தில் கூட சிபிஐ மூலம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், எனது 4 மப்ளர்களைத் தவிர அவர்களால் வேறெதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    தில்லி அரசின் முடிவுகள் தொடர்பான 400-க்கும் அதிகமான கோப்புகளை வரவழைத்து, துணைநிலை ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு மேற்கொண்டார். ஆனால், எங்களுக்கு எதிராக எதையும் கண்டறிய முடியவில்லை என்றார் அவர். முன்னதாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், "ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளுக்கு பின் 20 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்பதால்தான், கடவுள் எங்களுக்கு முன்கூட்டியே 67 எம்எல்ஏக்களை கொடுத்திருக்கிறார். கடவுள் எங்களுடனேயே உள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai