Enable Javscript for better performance
எம்.ஃபில்., பிஎச்.டி. சேர்க்கை நுழைவுத் தேர்வு: "இக்னோ' அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    எம்.ஃபில்., பிஎச்.டி. சேர்க்கை நுழைவுத் தேர்வு: "இக்னோ' அறிவிப்பு

    By DIN  |   Published on : 22nd January 2018 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜூலை 2018-ஆம் ஆண்டுக்கான எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேதிகளை தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (இக்னோ) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. 
    இதுதொடர்பாக இக்னோ ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநர் - பேராசிரியர் கௌஸ் த்வா பாரிக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
    இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில்  ஜூலை, 2018 ஆம் ஆண்டுக்கான எம்.ஃபில்., பிஎச்.டி,  படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு மையங்களில் வரும் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும்.
    இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கான இணையதளம் ஜனவரி 23-ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.  
    சமூகவியல்,  அரசியல் அறிவியல்,  பொருளாதாரம்,  புவியியல்,  மொழிபெயர்ப்பு கல்வி,   சமூகப் பணி,  வணிகம்,  வேதியியல் மற்றும் தொலைநிலைக் கல்வி ஆகிய பிரிவுகளில் எம்.ஃபில். படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    அதேபோன்று,  பிஎச்.டி. படிப்பில் உளவியல், மானுடவியல், சமூகவியல்,  நூலகம் மற்றும் தகவல் அறிவியல், அரசியல் அறிவியல்,  பொது நிர்வாகம்,  வரலாறு,  பாலினம் மற்றும் வளர்ச்சிக் கல்வி,  மகளிர் கல்வி,  புவியியல்,  மொழிபெயர்ப்புக் கல்வி, புள்ளியியல், உணவு மற்றும் நுண்ணூட்டச் சத்து அறிவியல்,  சுற்றுச்சூழல் கல்வி,  மேலாண்மை,  வாழ்க்கை அறிவியல், வணிகம், ஹிந்தி,  தொலைநிலைக் கல்வி,  நர்சிங்,  சமூகப் பணி,  இயற்பியல்,  வேதியியல்,  உயிரி வேதியியல் ஆகிய பிரிவுகளில்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அதில் பாரிக் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai