Enable Javscript for better performance
நண்பரைக் கொன்ற இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த சந்தேகத்தால் நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக பதர்பூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    தென்கிழக்கு மாவட்டத்தின் பதர்பூர் காவல் நிலைய காவலர்கள் கடந்த 18-ஆம் தேதி பதர்பூர் மேம்பாலம் அருகே உள்ள மதுரா சாலைப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது,  தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. அருகே ரத்தக் கறை படிந்த இரு கற்கள் கிடந்தன. இதையடுத்து,  இறந்தவரின் முகவரி குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
    இறந்தவரின் அருகில் கிழிந்த நிலையில் கிடந்த விசிட்டிங் கார்டின் பின்புறம்  செல்லிடப்பேசி எண்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த எண் குறித்து விசாரித்தபோது, அது ஃபரீதாபாதில் வசிக்கும் பெண்ணுடையது என்பது கண்டறியப்பட்டது. அவரை அழைத்து வந்து இறந்தவரின் சடலம் காண்பிக்கப்பட்டது. அப்போது,  இறந்தவர் தனது கணவர் பவன் சுக்லாவின் (28) நண்பரான தாஜ்பூர் பஹரி பகுதியைச் சேர்ந்த தேவேந்தர் என்று போலீஸாரிடம்  அப்பெண்  கூறினார்.  இதையடுத்து,  பவன் சுக்லாவிடம் விசாரணை நடத்த முயன்றபோது அவர் தலைமறைவானார். 
    இதையடுத்து,  தீவிர தேடுதலுக்குப் பிறகு துக்ளகாபாத் விரிவாக்கம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் பவன் சுக்லா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து,  அவர் கைது செய்யப்பட்டார்.  விசாரணையில் தேவேந்தர் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும்,  இதனால்,  அவருக்கு அளவுக்கு அதிகமாக போதைப் பொருளை கொடுத்து, கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் பவன் சுக்லா வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் உயர் அதிகாரி சின்மய் பிஸ்வால் தெரிவித்தார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai