Enable Javscript for better performance
பவானா தீ விபத்து: தில்லி அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பவானா தீ விபத்து: தில்லி அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

    By DIN  |   Published on : 22nd January 2018 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானா தீ விபத்து தொடர்பான பூர்வாங்க  அறிக்கையை, தில்லி தொழில்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் தில்லி மாநில தொழிற்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (டிஎஸ்ஐஐடிசி) ஞாயிற்றுக்கிழமை மாலை சமர்ப்பித்தது.
    இதுகுறித்து தில்லி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீ விபத்து நிகழ்ந்த ஆலைக்கு  முதலில் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு என்ற பெயரில் 100 சதுர மீட்டர் அளவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  வெடிபொருள், வெடி மருந்துகளை பேக்கிங் செய்துகொண்டிருந்த போது வெடித்துச் சிதறி தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீ விபத்துக்கான இறுதிக் காரணம் முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்.
    கட்டுமானப் பணிகள், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் தில்லி மாநகராட்சிகளுக்கு  தில்லி மாநகராட்சி  1957-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
    இந்த சட்டத்தின் 416 (1) பிரிவின்படி மாநகராட்சியின் ஆணையரின் அனுமதியில்லாமல் எவரும் தொழிற்சாலை தொடங்க முடியாது.  கட்டுமானப் பணிகளை முறைப்படுத்தவும்,  கட்டட வரைப்படத்துக்கு ஒப்புதல் அளிக்கவும்,  விதிகளை மீறும் பட்சத்தில் கட்டடத்தை காலி செய்யவும் மாநகராட்சி சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 
    தொழிற்சாலைகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரம் டிஎஸ்ஐஐடிசிக்கு இல்லை. தொழிற்பேட்டைகளின் வளர்ச்சி,  தொழிற்வளர்ச்சி ஆகிய பணிகளை மட்டுமே டிஎஸ்ஐஐடிசி மேற்கொண்டு வருகிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai