Enable Javscript for better performance
மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை குறிப்புகளை கையாள உரிய வழிமுறை: தில்லி அரசு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை குறிப்புகளை கையாள உரிய வழிமுறை: தில்லி அரசு உத்தரவு

    By DIN  |   Published on : 22nd January 2018 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள்  உள்பட மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைக் குறிப்புகளை முன்னுரிமை அடிப்படையில் கையாளுவதற்காக உரிய வழிமுறையை உருவாக்குமாறு அனைத்து துறைகளுக்கும் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
    இதுகுறித்து தில்லி அரசின் உயர் அதிகாரி கூறியதாவது: இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற அனைத்து செயலர்கள்,  துறைத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தின்போது,  எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்  உள்பட மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைக் குறிப்புகளை முன்னுரிமை அடிப்படையில் கையாளுவதற்காக உரிய வழிமுறையை உருவாக்குமாறு அனைத்து துறைகளுக்கும் தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
    இதையடுத்து,  எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அனுப்பும் பரிந்துரை குறிப்புகளை கையாளுவதற்கு ஒரு தனி வழிமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக  தில்லி அரசின் நிர்வாகத் துறை விரைவில் உத்தரவுகளை வெளியிடும். 
    துறைத் தலைவர்கள்கூட்டத்தின்போது, தில்லி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் துறைகளுடைய முன்மொழிவுடன் சட்டம்,  நிதி,  திட்டமிடல் ஆகிய துறைகளின் கருத்துகளையும் குறிப்பிட்டு சமர்ப்பிக்கமாறு  அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கு தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் உத்தரவிட்டார். மேலும்,  பொது நிர்வாகத் துறையானது இது தொடர்பான உத்தரவுகளை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்புமாறும் கூட்டத்தில்  கேட்டுக்கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai