Enable Javscript for better performance
மாநகராட்சிகளைக் கண்டித்து தில்லியில் நாளை கடையடைப்பு: ஆம் ஆத்மி ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சிகளைக் கண்டித்து தில்லியில் நாளை கடையடைப்பு: ஆம் ஆத்மி ஆதரவு

    By DIN  |   Published on : 22nd January 2018 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் "சீலிங்' நடவடிக்கையை கண்டித்து செவ்வாய்க்கிழமை (ஜன. 23)  நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 
    மேலும், அன்னிய நேரடி முதலீடு அனுமதி தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி வரும் 29-ஆம் தேதி பேரணி நடைபெறும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.
    இது குறித்து கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும்,  தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    வணிகர்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகும் "சீலிங்' நடவடிக்கையை தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடையில் வேலை செய்து வந்தோர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். 
    இதனிடையே, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அனுமதியளித்துள்ளது. 
    இவற்றுக்கு எதிராக  தில்லி வணிகர்கள் ஜனவரி 23-ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. இப்போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும்,  கட்சியின் உறுப்பினர்களும் திரளாக பங்கேற்று வணிகர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். 
    இத்துடன், சீலிங் நடவடிக்கை, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றுக்கு எதிராக கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்.  ஜனவரி 29-ஆம் தேதி திட்டமிட்டுள்ள நாடாளுமன்றம் நோக்கிய பேரணியிலும் கலந்து கொள்வார்கள். 
    அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து போராடும் என்றார் கோபால் ராய்.
    இப் பேட்டியின்போது,  கட்சியின் செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே, கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நிதின் தியாகி ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai