Enable Javscript for better performance
அடர் பனிமூட்டம்: 10 ரயில்கள் ரத்து, 22 ரயில்கள் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லி மற்றும் வட மாநிலங்களில் திங்கள்கிழமை காலை நிலவிய அடர் பனிமூட்டம் காரணமாக 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.  22 ரயில்கள் தாமதமாக வந்தன. 3 ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
    தில்லியில் கடந்த சில தினங்களாக காலை வேளையில் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால், விமான சேவை, ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  திங்கள்கிழமை காலையில் கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதனால்,  வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சாலைகளில் சென்றன.  குறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசனில் சராசரியை விட  இரு புள்ளிகள் குறைந்த 5.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் 97 சதவீததம் ஈரப்பதம் பதிவானது. 
    காலையில் 5.30 மணியளவில் 1,200 மீட்டர்களாக இருந்த காண்பு திறன், பின்னர் காலை 8.30 மணியளவில் வெகுவாக குறைந்து 800 மீட்டருக்கு சென்றது.  இதனால் சுமார் 22 ரயில்கள் தாமதமாக வந்தன. மோசமான வானிலை காரணமாக 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.  காண்புதிறன் வெகுவாகக் குறைந்த காரணத்தால் 3 ரயில்களின் புறப்படும் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai