Enable Javscript for better performance
எல்.இ.டி. தெரு விளக்குத் திட்டம்:  கிழக்கு தில்லி மாநகராட்சியில் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    எல்.இ.டி. தெரு விளக்குத் திட்டம்:  கிழக்கு தில்லி மாநகராட்சியில் தொடக்கம்

    By DIN  |   Published on : 23rd January 2018 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் எல்.இ.டி. தெரு விளக்குத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கிவைத்தார். 
    அப்போது,  அமைச்சர் பேசியதாவது: கிழக்கு தில்லி மாநகராட்சியின் வரலாற்றில் இந்த நிகழ்வு முக்கியமானதாகும்.  நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு தில்லி மாநகராட்சி,  இதுபோன்ற திட்டங்கள் மூலம் அதிக அளவு மின்சாரத்தை சேமிப்பது வரவேற்கத்தக்கது. எல்.இ.டி  விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் புவி வெப்பமாதல் குறைவடையும் என்றார் அவர். 
    இந்நிகழ்வில் கிழக்கு தில்லி மாநகராட்சி ஆணையர் ரன்பீர் சிங் பேசுகையில், " சுமார் 1 லட்சம் சோடியம் தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக கிழக்கு தில்லி மாநகராட்சியால் மாற்றப்பட்டுள்ளன. இதனால் பெருமளவு மின் சக்தி சேமிக்கப்படும். கிழக்கு தில்லி மாநகராட்சி முழுவதும் எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்கப்படும் பணிகள் இன்னும் 9 மாதங்களில் நிறைவடையும்' என்றார்.
    கிழக்கு தில்லி மேயர் நீமா பகத், துணை மேயர் பிபின் பிகாரி சிங், நிலைக்குழுத் தலைவர் பிரவீஷ் சர்மா, நிலைக்குழுத் துணைத் தலைவர் குர்ஜீத் கர், அவைத் தலைவர் சந்தோஷ் பால், எதிர் கட்சித் தலைவர் அப்துல் ரஹ்மான்  மாநகராட்சி ஆணையர் ரன்பீர் சிங், கூடுதல் ஆணையர்கள் ஜி.எல் மீனா,  ஆர்.எஸ்.மீனா உள்ளிட்ட பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai