Enable Javscript for better performance
சட்டப்பேரவைத் தேர்தலைதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவைத் தேர்தலைதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்

    By DIN  |   Published on : 23rd January 2018 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மக்கள் வெறும் இடைத் தேர்தலை எதிர்பார்க்கவில்லை;  அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலையே எதிர்பார்க்கின்றனர் என தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி திங்கள்கிழமை கூறினார்.
    தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா  தில்லி மக்களுக்கு எழுதியிருந்த பகிரங்க கடிதத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து மனோஜ் திவாரி மேலும் கூறியதாவது: 
    ஆம் ஆத்மி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  தங்களுடைய தவறுகளை மறைத்து விட்டு,  இடைத் தேர்தல் நடத்த பாஜக சதி செய்துள்ளதாக மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார். இதுபோன்று கடிதம் மூலம் நாடகமாடி மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. 
    தில்லி மக்கள் வெறும் இடைத் தேர்தலை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலைத்தான் எதிர்பார்க்கின்றனர். பாஜக மீது பழி சொல்லிக் கொண்டிருக்காமல் தேர்தலை ஆம் ஆத்மி முறையாக எதிர்கொள்ள வேண்டும்.  அரவிந்த் கேஜரிவாலின் முறைகேடான ஆட்சியால் 20 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai