Enable Javscript for better performance
ஜீஷான் அலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அல்காய்தா பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ஜீ ஷான் அலிக்கு எதிராக தில்லி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    இந்தியாவில் பயங்கரவாத இயக்கத்தை அமைப்பதற்காக இளைஞர்களை பணியமர்த்த உணர்ச்சிகரமான பேச்சுகளை பரப்பியதாக ஜீ ஷான் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    இதில், முகமது ஆசிப், ஜபர் மசூத், முகமது அப்துல் ரகுமான், அப்துல் சமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஜீ ஷானை தில்லி போலீஸ் சிறப்பு பிரிவு போலீஸார் தேடி வந்தனர்.
    இதையடுத்து, கடந்த ஆண்டு அகஸ்ட் மாதம் சவூதி அரேபியாவில் இருந்து ஜீ ஷான் நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில்,  ஜீ ஷான் அலிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தில்லி போலீஸ் சிறப்பு பிரிவு போலீஸார் தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி சித்தார்த் சர்மா முன் திங்கள்கிழமை தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai