Enable Javscript for better performance
டெங்குவின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கியது: 3 பேர் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    டெங்குவின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கியது: 3 பேர் பாதிப்பு

    By DIN  |   Published on : 23rd January 2018 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் டெங்குவின் தாக்கம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிவிட்டது. ஜனவரி மாதம் முதல் இதுவரை மூன்று பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வழக்கமாக டெங்குவின் தாக்கம் ஜூலை மாதம் மத்தியில் இருந்து நவம்பர் மாதம் இறுதி வரை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு டெங்குவின் தாக்கம் டிசம்பர் மாதம் வரை நீடித்தது.
    இந்நிலையில், தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தில்லியில் டெங்குவுக்கு 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மலேரியா, சிக்குன்குன்யாவுக்கு இதுவரை யாரும் பாதிக்கப்பட்டதாக பதிவாகவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜனவரி 13-ம் தேதி வரை இந்த நோய்களால் தில்லியில் யாருக்கும் பாதிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
    கடந்த ஆண்டு டெங்குவுக்கு தில்லியில் 10 பேர் உயிரிழந்தனர் என்றும் டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா ஆகியவற்றால் 9,271 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும்  தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்திருந்தது. 
    டெங்குவால் உயிரிழந்தவர்களில் 10-இல் 5 பேரும், பாதிக்கப்பட்ட 9,271 பேரில் 4,726 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள் அல்ல என மாநகராட்சி புள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.
    2016ஆம் ஆண்டு தில்லியில் 21 பேர் டெங்குவால் உயிரிழந்தனர் என்று தனியார் புள்ளி விவரங்கள் தெரிவித்தன. ஆனால் தில்லி மாநகராட்சி புள்ளி விவரமே 10 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்தது. இதேபோல், 2016-ம் ஆண்டில் மலேரியாவால் 17 பேரும், சிக்குன்குன்யாவால் 15 பேரும் உயிரிழந்ததாக தனியார் புள்ளி விவரங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai