Enable Javscript for better performance
தில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறமையானவர்கள்: மணீஷ் சிசோடியா பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறமையானவர்கள்: மணீஷ் சிசோடியா பாராட்டு

    By DIN  |   Published on : 23rd January 2018 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும்ஆசிரியர்கள் மிகவும் திறமையானவர்கள் என தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை பாராட்டினார். 
    பிற நாட்டு ஆசிரியர்கள் அமெரிக்காவில் சிறப்புப் பயிற்சி பெற "ஃபுல் பிரைட்' எனும் நிதியுதவித் திட்டம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், உலகம் முழுவதிலும் இருந்து திறமையான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. 
    இந்த ஆண்டு இத்திட்டத்தின்கீழ் தில்லியைச் சேர்ந்த ஆறு அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் மிக விரைவில் அமெரிக்கா சென்று சிறப்புப் பயிற்சி பெறவுள்ளனர். 
    இந்நிலையில், இந்த ஆசிரியர், ஆசிரியைகளை திங்கள்கிழமை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
    தில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மிகத் திறமையானவர்கள். அவர்கள் எந்த வகையிலும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர். தில்லியில் இருந்து இந்தத் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம் என்றார். 
    முராரி ஜா, மனு குலாதி, அஞ்சு பதக், தீப்தி சாவ்லா, ஸ்துதி கர், மணீஷா பவி ஆகிய ஆறு தில்லி அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் இந்த ஃபுல் பிரைட் நிதியுதவித் திட்டத்துக்குத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai