Enable Javscript for better performance
தெற்கு மாநகராட்சியில் 38 கடைகளுக்கு "சீல்'- Dinamani

சுடச்சுட

    

    ஹோஸ் காஸ் பகுதியில் 38 கடைகளுக்கு திங்கள்கிழமை தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
    ஹோஸ்காஸ் பகுதியில் மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த கடைகள் குறித்து புகார்கள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
    உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படி,  ஹோஸ்காஸ் பகுதியில்  மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த மூன்று வங்கிகள் உள்பட 38 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்தக் கடைகள் தரைத் தளத்திலும்,  முதலாவது தளத்திலும் அமைந்திருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai