Enable Javscript for better performance
தேசிய துணிச்சல்மிகு விருது பெற்ற குழந்தைகள் தில்லி மெட்ரோ ரயிலில் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய துணிச்சல்மிகு விருது பெற்ற குழந்தைகள் தில்லி மெட்ரோ ரயிலில் பயணம்

    By DIN  |   Published on : 23rd January 2018 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2017-ஆம் ஆண்டுக்கான தேசிய துணிச்சல்மிகு விருது பெற்ற குழந்தைகளை பாராட்டும் விதமாக தில்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கவும், மெட்ரோ ரயில் அருங்காட்சியகத்தை பார்வையிடவும் திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.
    இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) உயர் அதிகாரி கூறியதாவது:
    தங்களது துணிச்சலை வெளிப்படுத்தியமைக்காக "தேசிய துணிச்சல்மிகு விருது 2017'-க்கு மொத்தம் 18 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேருக்கு அவர்களது இறப்புக்கு பிறகு இந்த விருது வழங்கப்படுகிறது. இக்குழந்தைகளை இவ்விருதுக்கு இந்திய குழந்தைகள் நல கவுன்சில் (ஐசிசிடபிள்யூ) தேர்வு செய்தது. தேசிய தன்னார்வா அமைப்பான ஐசிசிடபிள்யூ, கடந்த 1952 ஆம் ஆண்டில் இருந்து குழந்தைகள் வளர்ச்சி, நலத்திற்காக பணியாற்றி வருகிறது. 
    இவ்வமைப்பின் நாடு முழுவதும் துணிச்சல் மிகுந்த செயலாற்றிய குழந்தைகளைக் கண்டறியும் நடவடிக்கையின்போது இந்த விருதுக்கு 18 குழந்தைகள் தேர்வாகினர். இவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடிவிருதுகளைவழங்கி பாராட்டஉள்ளார். அதைத் தொடர்ந்து, குடியரசு தின அணிவகுப்பிலும் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.
    இந்நிலையில், விருது பெறுவதற்காக தில்லி வந்துள்ள இந்த குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் தில்லி மெட்ரோ ரயில்வே அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லவும், ரயில் பயணத்தை மேற்கொள்ளச் செய்யவும் தில்லி மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, திங்கள்கிழமை காலை சென்ட்ரல் செக்ரடேரியேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பட்டேல் சௌக் ரயில் நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். முதல் முறையாக அவர்கள் மெட்ரோ ரயிலில் பயணித்தனர். 
    ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் பார்வையிட்டனர். அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயங்கும் விதம், மெட்ரோ ரயில் சேவை, அதன் கட்டுமானப் பணிகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் அங்கு நேரத்தை செலவிட்ட அக்குழந்தைகள் பின்னர் கஷ்மீர் கேட் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai