Enable Javscript for better performance
பள்ளிகளில் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: என்டிஎம்சி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகளில் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: என்டிஎம்சி திட்டம்

    By DIN  |   Published on : 23rd January 2018 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் மூன்று பள்ளிகளில் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக முனிசிபல் கவுன்சில் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். 
    இது தொடர்பாக முனிசிபல் கவுன்சில் அதிகாரிகள் கூறியதாவது: புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதல்படியாக, மூன்று பள்ளிகளில் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன. 
    பள்ளிகளில் உள்ள இடத்தின் அளவைப் பொருத்து இந்த நிலையங்களின் அளவு வேறுபடும். இந்த சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் தோட்டங்களுக்குப் பயன்படும். தில்லியின் பிற இடங்களுடன் ஒப்பிடும்போது, 
    புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு உள்பட்ட இடங்களில் அதிகளவு பசுமைப் பரப்புகள் உள்ளன. ஆனால், அவற்றை நிரந்தரமாக பேணுவதற்கு போதிய நீர் ஆதாரம் இல்லை. இதனால், முனிசிபல் கவுன்சிலின் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்புத் நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கே சுத்திகரிக்கப்படும் நீர் பசுமைப் பரப்புகளைப் பராமரிக்க பயன்படுத்தப்பட உள்ளது.
    இந்த சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கத் தேவையான தொழில்நுட்ட ஆலோசனைகளை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர். சுத்திகரிப்பு நிலையங்களுக்காக சிறப்பு தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், சுத்திகரிப்புக்கான செலவு குறையும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai