Enable Javscript for better performance
"அதிமுக அம்மா' அணி பெயரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்: தில்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன்- Dinamani

சுடச்சுட

    

    "அதிமுக அம்மா' அணி பெயரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்: தில்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் சார்பில் மனு

    By DIN  |   Published on : 24th January 2018 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் "அதிமுக அம்மா' அணி பெயரைப் பயன்படுத்தக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் சார்பில் செவ்வாய்க்கிழமை இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக அவரது சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
    எனவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது "அதிமுக - அம்மா' அணி என்ற பெயரில் இயங்க அனுமதிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்' எனக் கோரப்பட்டுள்ளது. 
    முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆகியோர் உள்ள இ.மதுசூதனன் தலைமையிலான அணிக்கு அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், தமிழக துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், எம்எல்ஏ செம்மலை ஆகியோரது சார்பிலும், தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி சார்பிலும் உச்ச நீதிமன்றத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் கடந்த 24-ஆம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தனித் தனி மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் முறையிடப்பட்டிருந்தன.
     இந்த மனுக்களை எஸ்.கே. கர்க் அமர்வு கடந்த டிசம்பர் முதல் வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, "மேல்முறையீட்டு மனுவின் முக்கிய கோரிக்கையை உரிய அமர்வு விசாரிக்கும். தொப்பி சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக மட்டும் விசாரணை நடத்தப்படும்' என்று நீதிபதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai