Enable Javscript for better performance
அரைக் கிலோ திருட்டுத் தங்கம், ரூ.10 லட்சத்துடன் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரைக் கிலோ திருட்டுத் தங்கம், ரூ.10 லட்சத்துடன் இளைஞர் கைது

    By DIN  |   Published on : 24th January 2018 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் அரைக் கிலோ திருட்டுத் தங்கம், ரூ.10 லட்சம் ரொக்கத்துடன் இளைஞரை தனிப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கடந்த ஆண்டு கரோல்பாகில் திருடிய தங்கத்தை அவர் விற்க முயன்றது தெரியவந்ததாகவும், அவரிடமிருந்து தங்கம், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து புறநகர் தில்லி காவல் துணை ஆணையர் எம்.என். திவாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    கரோல் பாக் பகுதியைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ரஞ்சித் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ஹரியாணா மாநிலம், பானிபட் பகுதியைச் சேர்ந்த சுக்தேவிடம் 26.11.2017-ஆம் தேதி ஒரு கிலோ தங்கத்தை கொடுத்து வாடிக்கையாளர் ஒருவரிடம் தருமாறு கூறியதாகவும், ஆனால், அவர் தங்கத்துடன் தலைமறைமாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். 
    இதையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிந்து போலீஸார் சுக்தேவை தேடி வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை புறநகர் தில்லி தனிப் பிரிவு போலீஸாருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில் கணக்கில் வராத தங்கத்தை ஒருவர் விற்க முயல்வதாக தெரிவிக்கப்பட்டது. 
    இதையடுத்து, புறநகர் தில்லியைச் சேர்ந்த தனிப் பிரிவு போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று அந்த இளைஞரை கைது செய்தனர். அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. 
    அப்போது, அவரிடம் 522 கிராம் தங்கம், ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது. 
    அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஏற்கெனவே அரை கிலோ தங்கத்தை அவர் விற்றிருந்ததும், மொத்தம் ஒரு கிலோ தங்கத்தை அவர் திருடியிருந்ததும் தெரியவந்தது. 
    தொடர் விசாரணையில், அவர் ஹரியாணா மாநிலம், பானிபட் பகுதியைச் சேர்ந்த சுக்தேவ் (37) என்பதும் கரோல் பாக் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் வேலை பார்த்தவும் என்பதும், அவரிடமிருந்து ஒரு கிலோ தங்கத்தை திருடிச் சென்றவர் என்பதும் தெரியவந்தது. 
    இது தொடர்பாக அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி எம்.என். திவாரி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai