Enable Javscript for better performance
இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரணம் சுபாஷ் சந்திரபோஸ்: ப்ரீத்தி அகர்வால்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரணம் சுபாஷ் சந்திரபோஸ்: ப்ரீத்தி அகர்வால்

    By DIN  |   Published on : 24th January 2018 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "கோடிக்கணக்கான இந்திய இளைஞர்கள் பின்பற்றும் வகையில் மிகச் சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்; அவரின் வாழ்க்கை வரலாற்றை இந்திய இளைஞர்கள் தவறாமல் படிக்க வேண்டும்'என வடக்கு தில்லி மேயர் ப்ரீத்தி அகர்வால் கேட்டுக்கொண்டார்.
    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 121- ஆவது நினைவு தினம் தில்லியில் பல இடங்களில் செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. தில்லி செங்கோட்டைக்கு முன் உள்ள சுபாஷ் பூங்காவில் உள்ள சுபாஷ் சந்திரபோஸின் சிலை அருகில் வடக்கு தில்லி மாநகராட்சி சார்பில் அவரது பிறந்த தின விழா நடைபெற்றது. அப்போது, பூங்காவில் உள்ள நேதாஜியின் சிலைக்கு மலர் மரியாதை செலுத்தி வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால் பேசியதாவது: 
    இந்திய இளைஞர்களுக்கு நேதாஜி முன்மாதிரியாக வாழ்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் சென்ற தலைவர் அவர். இந்திய தேச விடுதலைக்காக முக்கிய பங்காற்றிய அவரின் வாழ்க்கையை தேசப்பற்றுள்ள இளைஞர்கள் தவறாமல் படிக்க வேண்டும் என்றார் மேயர் ப்ரீத்தி அகர்வால். 
    இந்த நிகழ்வில் வடக்கு தில்லி மாநகராட்சி துணை ஆணையர் ருச்சிகா கட்யல் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai