Enable Javscript for better performance
எஸ்டிஎம்சி பள்ளிகளில் சர்வதேச தரத்தில் கல்வி: மனோஜ் திவாரி- Dinamani

சுடச்சுட

    

    எஸ்டிஎம்சி பள்ளிகளில் சர்வதேச தரத்தில் கல்வி: மனோஜ் திவாரி

    By DIN  |   Published on : 24th January 2018 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி மாநகராட்சியின் (எஸ்டிஎம்சி)  பிபிபி மாதிரி ஆரம்ப பள்ளிகள் சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதாக தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி செவ்வாய்கிழமை பாராட்டு தெரிவித்தார். 
    சுபாஷ் நகரில் செயல்பட்டு வரும் பிபிபி மாதிரிப் பள்ளியின் ஆண்டு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கவுன்சிலர்கள் சதேந்தர் சேத்தியா, முன்னாள் கவுன்சிலர் பவன் ரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
    இப்பள்ளிகளில் ஜப்பான் மொழி சிறப்பு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. 
    இந்நிகழ்வில் மனோஜ் திவாரி பங்கேற்றுப் பேசியதாவது:  
    இந்தப் பள்ளிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களின் குழந்தைகள் சர்வதேச தரத்திலான கல்வியைக் கற்று வருகிறார்கள்.  எளிய மக்களுக்கு சர்வதேச தரத்திலான கல்வியை வழங்கும் எஸ்.டி.எம்.சி.யின் பணியைப் பாராட்டுகிறேன். 
    எல்லாக் குழந்தைகளும் திறமையானவர்கள். அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டுவர். இக்குழந்தைகள் ஜப்பான் மொழியை சரளமாகப் பேசுவதால் அவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என்றார் மனோஜ் திவாரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai