Enable Javscript for better performance
"சீலிங்'க்கு எதிர்ப்பு: வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம்: ரூ. 1,500 கோடிக்கு வணிகம் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

  

  "சீலிங்'க்கு எதிர்ப்பு: வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம்: ரூ. 1,500 கோடிக்கு வணிகம் பாதிப்பு

  By DIN  |   Published on : 24th January 2018 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டுள்ள சீலிடும் நடவடிக்கைகளுக்கு எதிராக தில்லி சந்தைககளில் கடையடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  சீலிங் நடவடிக்கைக்கு எதிராக தில்லி வணிகர்கள் பெரிய அளவிலான போராட்டத்துக்கு திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக தில்லியில் உள்ள முக்கியச் சந்தைகளான சாந்தினி செளக், கரி போலி, கஷ்மீரி கேட், சாவ்ரி பஜார், நய் சடக், நயா பஜார், சதர் பஜார், தரியா கஞ்ச், கனாட் பிளேஸ், கரோல் பாக், பகார் கஞ்ச், கான் மார்க்கெட், கமலா நகர், அசோக் விஹார், மாடல் டவுன், ரோஹிணி, பீதம்புரா, ஷாலிமார் பாக், ரஜெளரி கார்டன், திலக் நகர், கீர்த்தி நகர், துவாரகா, ஜனக்புரி, டிஃபன்ஸ் காலனி, செளத் எக்ஸ்டென்ஷன், லாஜ்பத் நகர், கிரேட்டர் கைலாஷ், கிரீன் பார்க், ஹோஸ் காஸ், சரோஜினி நகர், கிருஷ்ணா நகர், ஷாதரா, லோனி ரோடு, தில்ஷாத் கார்டன், மயூர் விஹார் ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 
  கடையடைப்பு காரணமாக முக்கியச் சந்தைகளில் பெரும்பாலானவை வெறிச்சோடி காணப்பட்டன. 
  இதுகுறித்து அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கன்டேல்வால் கூறியதாவது:
  இந்த கடையடைப்பில் தில்லியில் உள்ள 2 ஆயிரம் வணிக அமைப்புகள் பங்கேற்றன. சுமார் 7 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த கடையடைப்பையொட்டி ஹோஸ் காஸ், சாவ்ரி பஜார் மெட்ரோ நிலையம் அருகில், கமலா நகர், மாடல் டவுன், ரஜெளரி கார்டன், செளத் எக்ஸ்டென்ஷன், கிருஷ்ணா நகர் ஆகிய ஆறு பகுதிகளில் தர்னா போராட்டங்கள் நடைபெற்றன. இந்த கடையடைப்பு காரணமாக ரூ. 1,500 கோடி அளவுக்கு வணிகம் பாதிக்கப்பட்டது. 
  சீலிங் நடவடிக்கையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் ' என்றார். 
  ஆம் ஆத்மிஆதரவு: வணிகர்களின் கடையடைப்புக்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்ததுடன், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
  இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறியது:
  பாஜக தலைமையிலான தில்லி மாநகராட்சிகள் நினைத்திருந்தால் சீலிங் நடவடிக்கை பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். உருமாற்றக் கட்டணம் செலுத்துவதற்கு மன்னிப்பு திட்டம் அறிவித்திருந்தாலே சீலிங் நடவடிக்கையை நிறுத்தியிருக்க முடியும். உருமாற்றக் கட்டணம் என்ற பெயரில் வணிகர்களிடமிருந்து தில்லி மாநகராட்சிகள் கொள்ளையடித்து வருகின்றன. சில்லறை வர்த்தகர்களை பாதிக்கும் அந்நிய நேரடி முதலீடு முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. சிறு, குறு வணிகர்களின் நலனில் பாஜகவுக்கு அக்கறை இல்லை. 
  இதுபோன்ற நடவடிக்கைகளால் தில்லி வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடையடைப்புப் போராட்டத்தின்போது 70 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்றனர்' என்றார் அவர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai