Enable Javscript for better performance
"சுகாதாரம்தான் பிரதான சவால்'- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு தில்லி மாநகராட்சி எதிர்கொள்ளும் பிரதான சவால் சுகாதாரம்தான் என கிழக்கு தில்லி மாநகராட்சி (இ.டி.எம்.சி.) ஆணையர் ரன்பீர் சிங் செவ்வாய்கிழமை தெரிவித்தார். 
    கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட  பகுதிகளில் சுகாதாரப் பணிகளை "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கான விளம்பர தூதராக பிரபல கதக் நாட்டியக் கலைஞர் அல்கானந்த் செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டார். இதற்கான நிகழ்வு கிழக்கு தில்லி மாநகராட்சியில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ரன்பீர் சிங் பேசியதாவது: 
    கிழக்கு தில்லியின் பிரதான பிரச்னையாக சுகாதாரம் உள்ளது.  சுகாதாரம் தொடர்பான பல ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத பிரச்னைகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  தீர்க்கப்படுகின்றன. அல்கானந்த் போன்ற பிரபலங்கள் இத்திட்டத்துக்கு விளம்பர தூதராக நியமிக்கப்படுவதன் மூலம் இத் திட்டத்தின் நோக்கங்கள் மக்களிடையே பரவலாக எடுத்துச் செல்லப்படும் என்றார் அவர்.
    நிகழ்வில் கிழக்கு தில்லி மேயர் நீமா பகத் பேசுகையில், "கிழக்கு தில்லி மாநகராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் கலாசார விழாக்களை நடத்துவதன் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடம்  அல்கானந்த் எடுத்துச் செல்லவுள்ளார். 
    இந்த கலாசார விழாக்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறவுள்ளது. இதற்காக பணம் ஏதும் பெறாமல் அவர் பணியாற்ற முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது' என்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai